Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாக, இந்தியாவின் நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் ஜின்ஸன் ஜான்சன் அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் பயிற்சியாளர் ஸ்காட் சிம்மன்ஸிடம் பயிற்சி பெறவுள்ளதாக கூறியுள்ளார். 


    மாட்ரிடில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக யூத் வில்வித்தை போட்டியில் ஜூனியர் காம்பவுன்ட் பிரிவில் இந்தியாவின் சுக்பீர் சிங், சங்கம்பிரீத் சிங், துஷார் படேர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 


    கொல்கத்தாவில் நடைபெறும் நாட்டின் மிகவும் பழமையான கால்பந்து போட்டியான துரந்து கோப்பை போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டம் சனிக்கிழமை சால்ட்லேக் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மோகன்பகான்-கோகுலம் கேரளா எஃப்சி அணிகள் மோதுகின்றன. 


    ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் தனது கிரிக்கெட் இயக்குநராக முன்னாள் நியூஸி பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், தலைமை பயிற்சியாளராக ஆஸி. வீரர் சைமன் கேய்ச் ஆகியோரை நியமித்துள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai