அணியில் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியாக உள்ளது: கவாஸ்கர்

டெஸ்ட் அணியில் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியாக உள்ளது என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
டிரம்ப்புடன், சுனில் கவாஸ்கர்.
டிரம்ப்புடன், சுனில் கவாஸ்கர்.


டெஸ்ட் அணியில் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியாக உள்ளது என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆண்டிகுவாவில் மே.இ.தீவுகளுடன் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆடி வருகிறது இந்தியா. இதற்கான அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ரவீந்திர ஜடேஜா ஓரே சுழற்பந்து வீச்சாளராகவும், ஹனுமா 6-ஆவது பேட்ஸ்மேனாகவும் சேர்க்கப்பட்டனர்.
அந்த ஆட்டத்தில் வர்ணனையாளர் பணியை செய்யும் கவாஸ்கர் கூறியதாவது: மே.இ.தீவுகளுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி வரும் அஸ்வினை சேர்க்காதது மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. அந்த அணிக்கு எதிராக 4 சதங்களுடன் 552 ரன்கள், 60 விக்கெட்டுகளை 11 ஆட்டங்களில் பெற்றுள்ளார் அஸ்வின். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அஸ்வினை, மே,.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் சேர்க்காதது அதிர்ச்சி தருகிறது என்றார் கவாஸ்கர்.
இதற்கு பதிலளித்த துணை கேப்டன் ரஹானே, மூத்த வீரர் அஸ்வின் சேர்க்கப்படாதது கடினமானது. ஆனால், அணியின் நலன் கருதியே நிர்வாகம் முடிவெடுக்கிறது. இந்த பிட்சில் பந்துவீச ஜடேஜா பொருத்தமானவர், மேலும் 6-ஆவது பேட்ஸ்மேன் தேவை என கருதப்பட்டது. ரோஹித், அஸ்வின் போன்ற வீரர்கள் வெளியில் இருப்பது கஷ்டமான சூழல் தான் என்றார்.
டிரம்ப்பை சந்தித்தார் கவாஸ்கர்: இருதய பாதிப்புள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை தருவதற்காக நலநிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெற்ற போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார் சுனில் கவாஸ்கர். 230 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் கவாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com