நான் சுயநலவாதி இல்லை, அணியே முக்கியம்: ரஹானே

நான் சுயநலவாதி இல்லை, அணியின் நலனே முக்கியம் என இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.
நான் சுயநலவாதி இல்லை, அணியே முக்கியம்: ரஹானே


நான் சுயநலவாதி இல்லை, அணியின் நலனே முக்கியம் என இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.
மே.இ.தீவுகளுடன் ஆண்டிகுவாவில் முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 25 ரன்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்த போது, சிறப்பாக ஆடிய ரஹானே 163 பந்துகளில் 81 ரன்களை விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
கடந்த 2017-இல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் கடைசியாக சதம் அடித்திருந்தார் ரஹானே. இதுதொடர்பாக ரஹானே கூறியதாவது:
ஏன் நான் சதம் அடிக்கவில்லை என்ற கேள்வி எழும்புவது எனக்கு தெரியும். நான் சுயநலவாதி இல்லை. அணியின் நலனே எனக்கு முக்கியம். மைதானத்தில் நான் ஆடும் வரை அணியின் நலனே முக்கியமானதாகும். சதம் அடிப்பது குறித்து யோசனை செய்த போதும், அணியின் ஸ்கோரை உயர்த்துவதே தலையாய பணியாக இருந்தது.
ஆங்கில கவுண்டி அணியான ஹாம்ப்ஷையரில் ஆடிய அனுபவம் உதவியாக இருந்ததா என இப்போதே கூற முடியாது. உலகக் கோப்பை அணியில் நான் இடம் பெற மாட்டேன் என தெரிந்த நிலையில் கவுண்டி அணியில் ஆடினேன். 
மே.இ.தீவு அணியினர் சிறப்பாக பந்துவீசினர். கெமர் ரோச் சீரான அளவில் பந்துவீசினார். எதிரணி வீரர்களை நாம் லேசாக கருதக்கூடாது. ராகுலுடன் இணைந்து 68 ரன்கள் சேர்த்தது மகிழ்ச்சியானது. ஹனுமா விஹாரியும் சிறப்பாக ஆடினார் என்றார் ரஹானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com