உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிச் சுற்றில் பிவி.சிந்து 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து 3-ஆவது முறையாக தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிச் சுற்றில் பிவி.சிந்து 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து 3-ஆவது முறையாக தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.
 ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வரும இப்போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை சீன தைபேயின் டைசூவை போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார் சிந்து.
 சனிக்கிழமை உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை சீனாவைச் சேர்ந்த சென் யுபெûயை எதிர்கொண்டு 21-7, 21-14 என்ற கேம் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தார் சிந்து.
 தொடர்ந்து 3-ஆவது முறையாக தகுதி: உலக பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறியுள்ளார் சிந்து. கடந்த 2 முறையும் இறுதியில் தோல்வியுற்ற சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
 இன்னும் திருப்தி ஏற்படவில்லை: சிந்து
 இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது குறித்து சிந்து கூறியதாவது:
 மகிழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. இறுதி ஆட்டத்தின் மீதே எனது பார்வை இருக்க வேண்டும். அதில் வென்று தங்கத்தை கைப்பற்ற வேண்டும். இறுதி ஆட்டம் எளிதாக இருக்காது, கடினமாக இருக்கும். பொறுமையாக ஆடி குறிக்கோளை நிறைவேற்றுவேன். அரையிறுதியில் தொடக்கம் முதலே முழு வீச்சில் ஆடினேன். இரண்டாவது கேமில் சில தவறுகளை செய்தேன். எனினும் ஆதிக்கம் செலுத்தியதால் வெற்றி வசமானது என்றார் சிந்து.
 முதன்முறையாக தங்கம் வெல்வாரா?
 இறுதிச் சுற்றில் அவர் ஜப்பானின் ஓஹுஹராவை எதிர்கொள்கிறார். இதில் முதன்முறையாக தங்கம் வெல்வாரா சிந்து என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 சாய் பிரணீத்துக்கு வெண்கலம்
 36 ஆண்டுகள் கழித்து உலகப் போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் சாய் பிரணீத் 13-21, 8-21 என்ற கேம் கணக்கில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜப்பானின் கென்டோ மொமடோவிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com