அருண் ஜேட்லி மறைவு: பிசிசிஐ, டிஎன்சிஏ உள்பட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் 

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு பிசிசிஐ, டிஎன்சிஏ உள்பட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு பிசிசிஐ, டிஎன்சிஏ உள்பட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 மத்திய முன்னாள் அமைச்சரான ஜேட்லி, முன்பு தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார்.
 அவரது காலத்தில் தில்லி கிரிக்கெட் நிர்வாகத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
 இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: சிறந்த கிரிக்கெட் ஆர்வலராக இருந்த ஜேட்லி தலைவராக இருந்த போது, தில்லியில் கிரிக்கெட் ஏற்றம் பெற்றது.
 கிரிக்கெட் கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மேம்படுத்தினார்.
 கிரிக்கெட் வீரர்களின் உற்ற நண்பனாக இருந்து அவர்களை ஊக்குவித்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
 தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்: சிறப்பான நிர்வாகம், செயல்பாட்டுக்காக பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர் ஜேட்லி, பள்ளி நாள்களிலேயே விளையாட்டுத் துறையில் கொடி நாட்டியவர். பிசிசிஐ துணைத் தலைவராகவும், ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் திறம்பட பணிபுரிந்தார்.
 கேப்டன் விராட் கோலி: ஜேட்லியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. மற்றவர்களுக்கு எப்போதும் உதவியாக இருந்த நல்ல மனிதர். 2--6-இல் என்னுடைய தந்தை மறைந்த போது, தனிப்பட்ட முறையில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார்.
 பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன்: அருண் ஜேட்லி மறைவு, நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. சிறந்த வழக்குரைஞர், வெற்றிகரமான நிதி அமைச்சர், உள்பட 20 ஆண்டுகள் பிசிசிஐயில் தவிர்க்க முடியாத நபராக திகழ்ந்தார்.
 கெளதம் கம்பீர்: என்னில் ஒரு பகுதி என்னை விட்டு சென்று விட்டது போல் உணர்கிறேன்.
 சேவாக்: தில்லி மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுத்தவர் ஜேட்லி.
 ஆகாஷ் சோப்ரா உள்பட பல்வேறு தரப்பினர் ஜேட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com