இந்தியாவின் சிறந்த கேப்டன் விராட் கோலி: வெற்றிகள் சூடும் மகுடம்!

இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்...
இந்தியாவின் சிறந்த கேப்டன் விராட் கோலி: வெற்றிகள் சூடும் மகுடம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 அணிகளும் ஆடி வருகின்றன. முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்களுக்கும், மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. இதன் தொடர்ச்சியாக இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 343/7 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 102, விஹாரி 92, கோலி 51 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. தரப்பில் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

419 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. 50 ரன்கள் எடுப்பதற்குள் 50 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரோச்சும் கம்மின்ஸும் 50 ரன்கள் சேர்த்த நிலையில் 26.5 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி, முதல் டெஸ்டை 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் அதிக வெற்றிகள், தோனிக்குச் சமமான மொத்த டெஸ்ட் வெற்றிகள் என கோலி வேறு எந்த இந்திய கேப்டனும் தொடாத உயரங்களைத் தொட்டுள்ளார். அதன் விவரங்கள்:

வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்

12 கோலி (26 டெஸ்டுகள்)
11 கங்குலி (28)
6 தோனி (30)
5 டிராவிட் (17)

அதிக டெஸ்ட் வெற்றிகள்: இந்திய கேப்டன்கள்

27 கோலி (47)
27 தோனி (60)
21 கங்குலி (49)
14 அசாருதீன் (47)

ஆசியாவுக்கு வெளியே அதிக வெற்றிகளைப் பெற்ற ஆசிய நாடுகளின் கேப்டன்கள்

8 - மிஸ்பா உல் ஹக்
7 - விராட் கோலி
6 - கங்குலி
4 - முஸ்டாக் முகமது, ஜாவத் மியாண்டட், வாசிம் அக்ரம், சலிம் மாலிக், தோனி. 

வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஆசிய நாடுகளின் கேப்டன்கள்

26 - மிஸ்பா உல் ஹக்
12 - விராட் கோலி
11 - கங்குலி

(மிஸ்பா உல் ஹக்கின் வெற்றிகளில் ஐக்கிய அரபு அமீரக வெற்றிகளைக் கழித்துவிட்டால் வெளிநாடுகளில் அவர் அடைந்த வெற்றிகள் - 13)

முதல் 100 சர்வதேச வெற்றிகளைக் குறைவான ஆட்டங்களில் அடைந்த கேப்டன்கள்

134 - ரிக்கி பாண்டிங்
150 - ஸ்டீவ் வாஹ்
151 - ஹன்ஸி குரோனியே
152 - கோலி

இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றிகள் (ரன்கள் அடிப்படையில்)

337 v தென் ஆப்பிரிக்கா, தில்லி, 2015 - கோலி
321 v நியூஸிலாந்து, இந்தூர், 2016 - கோலி
320 v ஆஸ்திரேலியா, மொஹலி, 2008 - தோனி
318 v மே.இ. தீவுகள், ஆண்டிகுவா, 2019 - கோலி
304 v இலங்கை, கேலே, 2017 - கோலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com