பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கி அமைச்சர் ரிஜிஜூ பாராட்டு

இந்தியா வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு புதுதில்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கி அமைச்சர் ரிஜிஜூ பாராட்டு

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பாட்மிண்டன் சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹாரவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து.

உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு இந்தியா வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு புதுதில்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை மரியாதை நிமித்தமாக செவ்வாய்கிழமை சந்தித்தார் பி.வி.சிந்து. ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கி அமைச்சர் ரிஜிஜூ பாராட்டினார். அப்போது அவரது பயிற்சியாளரும் பாட்மிண்டன் வீரருமான கோபிசந்த் உடனிருந்தார். 

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ரிஜ்ஜு ட்விட்டரில் பதிவிட்டதாவது, ''உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை சந்திப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களை குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com