துளிகள்...


 இந்திய அணியின் முன்னாள் வீரரும்,தமிழகத்தைச் சேர்ந்தவருமான முரளி விஜய், இங்கிலாந்தின் கவுண்டி அணியான சாமர்செட் அணிக்காக கடைசி 3 சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் பங்கேற்று ஆட உள்ளார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அஸார் அலிக்கு பதிலாக முரளி விஜய் இடம் பெற்றுள்ளார் என சாமர்செட் அணி நிர்வாகம் கூறியுள்ளது.


    இந்திய அணியில் 5-ஆவது பந்துவீச்சாளராக இடம் பெறும் வகையில், தனது சுழற்பந்து வீச்சு திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உள்ளதாக இளம் வீரர் ஹனுமா விஹாரி கூறியுள்ளார். பேட்டிங்கில் சிறந்து விளங்கும் ஹனுமா, ஆஃப் ஸ்பின்னிலும் தேர்ச்சி பெற்றால், மூத்த வீரர் அஸ்வினுக்கு மாற்றாக திகழ்வார் எனக் கருதப்படுகிறது.


    ஷாட்களை தவறாக கணித்து ஆடியது ரிஷப் பந்த்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என மூத்த வீரர் விரேந்தர் சேவாக் கூறியுள்ளார். அவர் தனது பேட்டிங் திறமையை மேலும் செம்மைப்படுத்தி, அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற வேண்டும் எனவும் சேவாக் தெரிவித்தார்.


    ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் வென்றதின் மூலம் இந்திய அணி சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. எனினும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் சில குறைபாடுகளை சரி செய்ய வேண்டியுள்ளது என கேப்டன் ராணி ராம்பால் கூறியுள்ளார்.


    ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகனும், இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், வரும் சீசனுக்காக 15 பேர் கொண்ட மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நாக்பூரில் நடைபெறவுள்ள பாபுனா கோப்பை போட்டியில் மும்பை அணி ஆடுகிறது.


    மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக ஹாங்காக் கிரிக்கெட் அணி வீரர்கள் இர்பான் அகமது, நதீம் அகமது ஆகிய இருவருக்கு கிரிக்கெட் ஆட வாழ்நாள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.


    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) வரும் சீசனை முன்னிட்டு கேரளத்தைச் சேர்ந்த மிட்பீல்டர் சிகே. வினித்தை ஒப்பந்தம் செய்துள்ளது ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி. ஏஎப்சி கோப்பை போட்டியில் பெங்களூரு அணி இரண்டாம் இடம் பெற உதவியவர் வினித்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com