இந்திய அணியில் தோனி இடம் பெறாதது ஏன்?: தேர்வுக்குழு உறுப்பினர் விளக்கம்

டி20 உலகக் கோப்பைக்காகத் தயாராகவும் வருங்காலத்துக்குத் திட்டமிடவும் எங்களுக்கு அவர் நேரம் அளித்துள்ளார்.
இந்திய அணியில் தோனி இடம் பெறாதது ஏன்?: தேர்வுக்குழு உறுப்பினர் விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள இத்தொடரில் ஆடும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது. அதில் மூத்த வீரர் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் தேர்வுக்குழு, தோனியைத் தவிர்க்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குத் தேர்வுக்குழு உறுப்பினர் கூறியதாவது: 

தோனியைத் தவிர்க்கவில்லை. அதற்குப் பதிலாக டி20 உலகக் கோப்பைக்காகத் தயாராகவும் வருங்காலத்துக்குத் திட்டமிடவும் எங்களுக்கு அவர் நேரம் அளித்துள்ளார். மக்களின் கருத்தை விடவும் அணியின் நலனே முக்கியம் என உணர்ந்துள்ளார். ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டால் உதவ அவர் தயாராக இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு முன்பு இரு மாதங்கள் ஓய்வு கேட்டிருந்தார். அவரிடம் உட்கார்ந்து அடுத்து என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் விவாதிக்கவில்லை. ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டால், தோனிக்குப் பிறகான இந்திய அணி அவ்வளவு சரியாக இல்லை. 

தோனி முன்பு போல விளையாடவில்லை என்பது ரசிகர்களின் கருத்தா? அணிக்கு அவர் எந்தளவுக்கு உபயோகமாக இருக்கிறார் என்பது அணி நிர்வாகத்துக்குத் தெரிகிறது. இன்றைக்கும் ஃபினிஷராக அவருக்கான ஒரு மாற்று வீரர் இன்னும் கிடைக்கவில்லை. 350 ஒருநாள், 98 டி20 ஆட்டங்களில் விளையாடிய வீரரைக் குறை சொல்வது எளிது. தங்கள் வாழ்க்கையில் சிலர் பார்த்த ஆட்டங்களை விடவும் அவர் அதிகமான ஆட்டங்களில் இந்தியா வெல்ல உதவியாக இருந்திருக்கிறார். ஒருநாள், டி20 ஆட்டங்களில் ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டால், அவரை மாற்ற இன்னொரு வீரர் நம்மிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com