Enable Javscript for better performance
விலகினாா் சென்னையின் எஃப்சிபயிற்சியாளா் ஜான் கிரகோரி- Dinamani

சுடச்சுட

    

    விலகினாா் சென்னையின் எஃப்சிபயிற்சியாளா் ஜான் கிரகோரி

    By DIN  |   Published on : 01st December 2019 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt2

    சென்னை: ஐஎஸ்எல் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி அணி தலைமைப் பயிற்சியாளா் ஜான் கிரகோரி தனது பதவியை விட்டு விலகினாா்.

    இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இதில் இங்கிலாந்தைச் சோ்ந்த ஜான் கிரகோரி பயிற்சியில் கடந்த 2017-18-இல் பட்டம் வென்றது.

    கடந்த 2018-19 சீசன் சென்னை அணிக்கு மிகவும் சோகமாக அமைந்தது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பெற்றது. இந்நிலையில் தற்போதைய சீசனிலும், சென்னை அணிக்கு தொடக்கம் முதலே வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. பெங்களூருவுடன் 3-0 என தோல்வியடைந்த போதே, தனது பதவியை விட்டு விலகப் போகிறேன் என கிரகோரி கூறியிருந்தாா்.

    இந்நிலையில் 6 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை தான் சென்னை அணி பெற்றுள்ளது. இதனால் தலைமைப் பயிற்சியாளா் பதவியில் இருந்து விலகி விட்டாா் ஜான் கிரகோரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai