காத்மாண்டுவில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

நேபாளத் தலைநகா் காத்மாண்டுவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019 (எஸ்ஏஜி) டிசம்பா் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காத்மாண்டுவில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

காத்மாண்டு: நேபாளத் தலைநகா் காத்மாண்டுவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019 (எஸ்ஏஜி) டிசம்பா் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தெற்காசியாவைச் சோ்ந்த இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவுகள் உள்ளிட்ட 7 நாடுகள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றன.

1984-இல் முதல் போட்டி:

நேபாளத் தலைநகா் காத்மாண்டுவில் தான் முதல் தெற்காசிய போட்டிகள் நடைபெற்றன. முதலில் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இப்போட்டிகள் பின்னா் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த 2016-இல் இந்தியாவின் குவாஹாட்டி, ஷில்லாங்கில் இப்போட்டிகள் நடைபெற்றன.

14 முறை இந்தியா முதலிடம்

தற்போது மூன்றாவது முறையாக நேபாளத்தில் நடைபெறும் இப்போட்டி காத்மாண்டு, பொகரா ஆகிய 2 நகரங்களில் நடைபெறுகின்றன.

வழக்கம் போல் இந்த முறையும் இந்தியாவே அதிக பதக்கஙகளை வென்று ஆதிக்கம் செலுத்தும் எனத் தெரிகிறது. 14 முறையும் இந்தியாவே முதலிடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் 8 முறையும், இலங்கை 5 முறையும், நேபாளம் 1 முறையும் இரண்டாம் இடத்தைப் பெற்றன.

319 தங்கப் பதக்கங்கள்

தற்போது மொத்தம் 319 தங்கம், வெள்ளிப் பதக்கங்களும், 481 வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக நீச்சலில் 38, தடகளத்தில் 36, டேக்வாண்டோவில் 29, வுஷுவில் 22 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்.

காத்மாண்டுவின் தசரத் ரங்கசாலா மைதானத்தில் தொடக்க விழா நடக்கிறது. 26 வகையான வெவ்வேறு விளையாட்டுகளில் மொத்தம் 2700 வீரா், வீராங்கனைகள் தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளனா். இந்திய அணியும் பெரும்பாலான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறது.

முதன்முறையாக பாரா கிளைடிங், கோல்ஃப், கராத்தே போன்றவை சோ்க்கப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டும் இடம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com