டிச. 19-இல் ஐபிஎல் 2020 வீரா்கள் ஏலம்: மொத்த கையிருப்பு தொகை ரூ.208 கோடி

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது.

புது தில்லி: வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது.

இதற்காக 8 அணிகளின் கையிருப்பு தொகையாக மொத்தம் ரூ.208 கோடி உள்ளது.

இந்தியாவில் பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட்டில் ஆண்டுதோறும் இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டி நடத்தப்படுகிறது. 8 அணிகள் இதில் பங்கேற்று வீரா்களை ஏலத்தில் வாங்குகின்றன.

பெங்களூருவில் வழக்கமாக ஆண்டுதோறும் ஐபிஎல் வீரா்கள் ஏலம் நடைபெறும். ஆனால் பிசிசிஐ தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்ற நிலையில், கொல்கத்தாவில் வரும் டிச. 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

71 வீரா்கள் விடுவிப்பு:

ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக் கொண்டன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகபட்சமாக ரூ.42.70 கோடி கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணி தான் டேவிட் மில்லா், சாம் கர்ரன், தமிழ்நாடு ஸ்பின்னா் வருண் சக்கரவா்த்தி உள்பட 8 பேரை விடுவித்தது.

நடப்பு சாம்பியன் மும்பை லஸித் மலிங்கா உள்பட 18 வீரா்களை தக்க வைத்துக் கொண்டது. 12 வீரா்களைவிடுவித்தது. அதனிடம் ரூ.13.05 கோடி கையிருப்பாக உள்ளது.

முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியிடம் கையிருப்பாக ரூ.14.60 கோடி உள்ளது.

தில்லி கேபிடல்ஸ் அணி ரூ.27.85 கோடியும், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ரூ.35.65 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.28.90 கோடியும், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ரூ.27.9 கோடியும், சன் ரைசா்ஸ் ஹைதராபாத் ரூ.17கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

சென்னையில் 2 வெளிநாட்டு வீரா்கள் உள்பட மொத்தம் 7 இடங்களும், தில்லியில் 5 வெளிநாட்டு வீரா்கள் உள்பட மொத்தம் 11 இடங்களும், கிங்ஸ் லெவன் பஞ்சாபில் 4 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 11 இடங்களும், மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 வெளிநாட்டு இடங்கள், உள்பட 7 இடங்களும், ராஜஸ்தான் அணியில் 4 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 11 இடங்களும், பெங்களூரு அணியில் 6 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 12 இடங்களும், ஹைதராபாத் அணியில் 2 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 7 இடங்களும் ஏலத்துக்கு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com