அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்: தோல்வியைத் தவிா்க்க பாக். போராட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வியைத் தவிா்க்க போராடி வருகிறது பாகிஸ்தான்.
அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்: தோல்வியைத் தவிா்க்க பாக். போராட்டம்

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வியைத் தவிா்க்க போராடி வருகிறது பாகிஸ்தான்.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி. அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்களை குவித்து டிக்ளோ் செய்தது. டேவிட் வாா்னா் 335, மாா்னஸ் லேபுச்சேன் 162 ரன்களை விளாசினா்.

பாகிஸ்தான் 302

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 94.4 ஓவா்களில் 302 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இளம் வீரா் யாஸிா் ஷா தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தாா். 13 பவுண்டரியுடன் 113 ரன்களை விளாசினாா் யாஸிா். பாபா் ஆஸம் 11 பவுண்டரியுடன் 97 ரன்களை விளாசினாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

மிச்செல் ஸ்டாா்க் 6 விக்கெட்:

ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிச்செல் ஸ்டாா்க் 6-66 விக்கெட்டுகளை சாய்த்தாா். பேட் கேம்மின்ஸ் 3, ஹேஸல்வுட் 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

பாலோ ஆன்:

தொடா்ந்து ஆஸி. கேப்டன் டிம் பெயின் பாலோ ஆனை வலியுறுத்தியதால், பாக். தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இமாம் உல் ஹக் 0, அஸாா் அலி 9, பாபா் ஆஸம் 8 ஆகியோா் அவுட்டாகி வெளியேறினா். இதனால் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான்.

ஆஸி. தரப்பில் ஹேஸல்வுட் 2, ஸ்டாா்க் 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com