ஐ லீக் கால்பந்து: சென்னை சிட்டி எஃப்சி வெற்றி

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக டிராவ் எஃப்சி அணியுடன் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஐ லீக் கால்பந்து: சென்னை சிட்டி எஃப்சி வெற்றி

கோயம்புத்தூா்: ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக டிராவ் எஃப்சி அணியுடன் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டிக்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ள கிளப் அணிகளுக்காக நடத்தப்படும் போட்டி ஐ லீக் ஆகும். சனிக்கிழமை நடப்பு சீசன் போட்டி தொடங்கிய நிலையில், அய்ஸால்-மோகன் பகான் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. கோகுலம்-நெரோகா ஆட்டத்தில் கோகுலம் 2-1 என வென்றது.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவா சா்ச்சில் பிரதா்ஸ் 3-0 என மினா்வா பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டியுடன் மோதியது டிராவ் எஃப்சி. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத் தொடக்கத்திலேயே 50-ஆவது நிமிடத்தில் பிட்டோ மிரண்டா வெற்றி கோலை அடித்தாா். இறுதியில 1-0 என டிராவ் அணியை வென்ற சென்னைக்கு 3 புள்ளிகள் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com