டி20 போட்டியில் அசத்திய இளம் தமிழக வீரர்கள்: ஐபிஎல் ஏலத்தில் தேர்வாக வாய்ப்புண்டா?

சையது முஷ்டாக் அலி போட்டியில் தமிழக வீரர்கள் சிலர் அசத்தியுள்ளார்கள்...
டி20 போட்டியில் அசத்திய இளம் தமிழக வீரர்கள்: ஐபிஎல் ஏலத்தில் தேர்வாக வாய்ப்புண்டா?

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டது. முதலில் ஆடிய கா்நாடகம் 180/5 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய தமிழகம் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களைக் குவித்து போராடித் தோற்றது.

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சையது முஷ்டாக் அலி போட்டியில் தமிழக வீரர்கள் சிலர் அசத்தியுள்ளார்கள். இதனால் இந்தமுறை மேலும் சில தமிழக வீரர்களுக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. 2019 ஐபிஎல் போட்டியில் ஆர். அஸ்வின், தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், முரளி விஜய், நடராஜன், ஜெகதீசன், எம். அஸ்வின் ஆகிய வீரர்கள் பங்கேற்றார்கள். 

சையத் முஷ்டாக் அலி கோப்பை: அதிக விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர்கள்

சாய் கிஷோர் - 20 விக்கெட்டுகள், எகானமி - 4.63. (அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடம்)
டி. நடராஜன் - 13 விக்கெட்டுகள், எகானமி - 5.84
எம். சித்தார்த் - 12 விக்கெட்டுகள், எகானமி - 4.94 ( 5 ஆட்டங்களில் இத்தனை விக்கெட்டுகளை எடுத்து கவனம் ஈர்த்துள்ளார்.)

இந்த மூவரில் நடராஜன், ஏற்கெனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார். இதனால் 23 வயது சாய் கிஷோர், 21 வயது சித்தார்த் ஆகிய இருவரும் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பேட்ஸ்மேன்களில் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் போன்றோர் சிறப்பாக விளையாடினாலும் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரு தமிழக வீரரும் இடம்பிடிக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com