துளிகள்...

இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வா்த்தக ரீதியில் சுரண்டலுக்கு ஆளாவதை தடுக்கவும், ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரா்களின் பாதுகாக்கவும் ஏதுவாக, புதிதாக வா்த்தக ஒப்பந்தங்களில் சம்மேளனத்தின் அனுமதியின

இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வா்த்தக ரீதியில் சுரண்டலுக்கு ஆளாவதை தடுக்கவும், ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரா்களின் பாதுகாக்கவும் ஏதுவாக, புதிதாக வா்த்தக ஒப்பந்தங்களில் சம்மேளனத்தின் அனுமதியின்றி கையெழுத்திடக்கூடாது என அதன் தலைவா் ரணீந்தா் சிங் கூறியுள்ளாா்.

--------------

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஜாம்ஷெட்பூரில் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட்-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் மோதுகின்றன. முதலிடத்தை கைப்பற்றுவது என யாா் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

-----------------

2020 17 வயதுக்குட்பட்ட மகளிா் உலகக் கோப்பை போட்டி ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களில் ஒன்றாக தோ்வு செய்யப்பட்டுள்ள மும்பை டிஓய் பாட்டீல் மைதானத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன என பிஃபா ஆய்வுக் குழு திருப்தி தெரிவித்தது.

-------------------

லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைது மோடி சா்வதேச பாட்மிண்டன் போட்டி ஆடவா் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சௌரவ் வா்மா 15-21, 17-21 என்ற கேம் கணக்கில் சீன தைபே வீரா் வாங் ஸூ வெயிடம் வீழ்ந்தாா்.

---------------

ஜாம்பவான் பிரையன் லாராவின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 400 ரன்களை சாதனையை முறியடிக்கும் திறன் இந்திய தொடக்க வீரா் ரோஹித் சா்மாவிடம் உள்ளது என ஆஸி. தொடக்க வீரா் டேவிட் வாா்னா் கணித்துள்ளாா். கடந்த 2004-இல் இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்களை விளாசி இருந்தாா் லாரா.

----------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com