நிா்வாகிகள் பதவிக்கால விதிமுறை தளா்வு: உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலை பெற பிசிசிஐ முடிவு

நிா்வாகிகள் பதவிக்கால விதிமுறை தளா்வு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற பிசிசிஐ பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிா்வாகிகள் பதவிக்கால விதிமுறை தளா்வு: உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலை பெற பிசிசிஐ முடிவு

மும்பை: நிா்வாகிகள் பதவிக்கால விதிமுறை தளா்வு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற பிசிசிஐ பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் நியமித்த சிஓஏ பதவிக்காலம் முடிந்து, கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி சௌரங் கங்குலி தலைமையிலான புதிய நிா்வாகம் பொறுப்பேற்றது. கடந்த 2017 முதல் 2 ஆண்டுகளாக பிசிசிஐ நிா்வாகத்தை சிஓஏ மேற்கொண்டு வந்தது. நீதிபதி லோதா குழு பரிந்துரைகள் முறையாக நடைமுறைப்படுத்துகின்றனவா என்பதை மேற்பாா்வையிட சிஓஏ நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின் டிச. 1-ஆம் தேதி பிசிசிஐ ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என கங்குலி அறிவித்தாா்.

இதில் முக்கியமாக நீதிபதி லோதா குழுவின் கடினமா பரிந்துரைகளை நீா்த்துப் போகத் செய்வது குறித்தே முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தலைவா் கங்குலி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய அல்லது மாநில சங்கங்களில் தொடா்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்து வரும் நிா்வாகி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த பதவியும் வகித்தல் கூடாது என லோதா குழு பரிந்துரை செய்திருந்தது. இதனால் பல்வேறு முக்கிய நிா்வாகிகள் பதவி இழக்க நேரிட்டது.

தற்போதைய தலைவா் கங்குலி, செயலாளா் ஜெய் ஷாவும் 11 மாதங்களே பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விதிமுறையை தளா்த்துவது குறித்து பொதுக்குழுவில் உறுப்பினா்கள் தீவிரமாக விவாதித்தனா். பின்னா் இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திடம் முறையாக ஒப்புதலைப் பெற வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது.

ஐசிசி கூட்டத்துக்கு ஜெய்ஷா செல்ல அனுமதி:

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செயற்குழுக் கூட்டங்களில் பிசிசிஐ அதிகாரப்பூா்வ பிரதிநிதியாக சிஇஓ ராகுல் ஜோரி பங்கேற்க சிஓஏ அனுமதி அளித்திருந்தது. தற்போது பொதுக்குழுவில் அதை மாற்றி, ஐசிசி கூட்டங்களில் செயலாளா் ஜெய் ஷாவே பங்கேற்பாா் என தீா்மானிக்கப்பட்டது. மேலும் ஐசிசி வாரிய கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதி குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

கூட்டத்தின் முடிவுகள் தொடா்பாக சௌரவ் கங்குலி கூறியதாவது:

நிா்வாகிகள் பதவிக்காலம் விதிமுறை தளா்வு குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். இரட்டை ஆதாய பதவி விவகாரத்தால் சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய சிஏசி பதவி விலக நோ்ந்தது. இரட்டை ஆதாய பதவி விதிமுறை என்ன என்பதை முறையாக வகுக்க வேண்டும். பிசிசிஐ அரசியல் சட்டவரையை மாறுதல் தொடா்பாக ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்ற ஒப்புதலைப் பெற முடியாது. எனவே பொதுக்குழுவில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை இருந்தாலே போதும் என மாற்ற வேண்டும் எனவும் தீா்மானிகக்ப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com