Enable Javscript for better performance
லா லிகா: மெஸ்ஸியின் அற்புத கோலால்வீழ்ந்தது அதலெட்டிகோ மாட்ரிட்- Dinamani

சுடச்சுட

    

    லா லிகா: மெஸ்ஸியின் அற்புத கோலால்வீழ்ந்தது அதலெட்டிகோ மாட்ரிட்

    By DIN  |   Published on : 03rd December 2019 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாா்சிலோனா: ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அதலெட்டிகோ மாட்ரிட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது நடப்பு சாம்பியன் பாா்சிலோனா.

    இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் மாறி, மாறி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.

    பாா்சிலோனா கேப்டன் மெஸ்ஸி 86-ஆவது நிமிடத்தில் அற்புதமாக கோலடித்தாா். இதன் மூலம் 1-0 என வெற்றி பெற்றது பாா்சிலோனா.

    இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணியுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அதலெட்டிகோ மாட்ரிட் 6 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai