ஐபிஎல் 2020 போட்டியிலிருந்து பிரபல ஆஸி. வீரர் விலகல்!

ஸ்டார்க், கடைசியாக 2015-ல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார். 2018 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் கொல்கத்தா அணி...
ஐபிஎல் 2020 போட்டியிலிருந்து பிரபல ஆஸி. வீரர் விலகல்!

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன.

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேல் ஸ்டெயின், மேத்யூஸ் ஆகிய வீரர்கள் தங்களுடைய அடிப்படை விலையாக ரூ. 2 கோடியை நிர்ணயம் செய்துள்ளார்கள். 

கடந்த வருடம், உலகக் கோப்பையை முன்னிட்டு, ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஃபிஞ்ச் ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மேக்ஸ்வெல், ஃபிஞ்ச் ஆகிய இருவரும் இந்தமுறை ஏலத்தில் பங்கேற்கிறார்கள். ஆனால் மிட்செல் ஸ்டார்க், ஐபிஎல் 2020 போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காததால் ஏலத்தில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளார். ஸ்டார்க் போல இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. 

ஸ்டார்க், கடைசியாக 2015-ல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார். 2018 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் கொல்கத்தா அணி, ஸ்டார்க்கை ரூ. 9.40 கோடிக்குத் தேர்வு செய்தது. எனினும் காயம் காரணமாக அவர் அந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. எனினும் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரெட் டி20 போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள ஸ்டார்க், ரூ. 1.14 கோடிக்கு வெல்ஸ் ஃபயர் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.  

971 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தாலும் 8 ஐபிஎல் அணிகளால் அதிலிருந்து 73 வீரர்களை மட்டுமே தேர்வு செய்யமுடியும். அந்த 73-ல் 29 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஐபிஎல் 2020 போட்டிக்குத் தேர்வாவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com