இனி ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு பகலிரவு டெஸ்ட்: கங்குலி விருப்பம்!

ஒவ்வொரு டெஸ்டிலும் இல்லாமல், ஒரு தொடரில் ஒரு டெஸ்டாவது பகலிரவு டெஸ்டாக இருக்கவேண்டும்.
இனி ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு பகலிரவு டெஸ்ட்: கங்குலி விருப்பம்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி சமீபத்தில் பங்கேற்றுள்ளது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:

பகலிரவு டெஸ்ட் குறித்து நான் மகிழ்ச்சியாக உள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டை இது முன்னகர்த்திச் செல்லும். ஒவ்வொரு டெஸ்டிலும் இல்லாமல், ஒரு தொடரில் ஒரு டெஸ்டாவது பகலிரவு டெஸ்டாக இருக்கவேண்டும். கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் குறித்த என்னுடைய அனுபவங்களை பிசிசிஐ நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொள்வேன். இதர மைதானங்களிலும் பகலிரவு டெஸ்ட் நடத்தப்படும். வெறும் ஐந்தாயிரம் ரசிகர்கள் முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட யாரும் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com