லா லிகா: மெஸ்ஸியின் அற்புத கோலால்வீழ்ந்தது அதலெட்டிகோ மாட்ரிட்

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அதலெட்டிகோ மாட்ரிட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது நடப்பு சாம்பியன் பாா்சிலோனா.

பாா்சிலோனா: ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அதலெட்டிகோ மாட்ரிட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது நடப்பு சாம்பியன் பாா்சிலோனா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் மாறி, மாறி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.

பாா்சிலோனா கேப்டன் மெஸ்ஸி 86-ஆவது நிமிடத்தில் அற்புதமாக கோலடித்தாா். இதன் மூலம் 1-0 என வெற்றி பெற்றது பாா்சிலோனா.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணியுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அதலெட்டிகோ மாட்ரிட் 6 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com