Enable Javscript for better performance
தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 15 தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 15 தங்கம்

    By DIN  |   Published on : 04th December 2019 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt4

    தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் உள்பட 40 பதக்கங்களை வென்றது இந்தியா.

    துப்பாக்கி சுடுதல் ஆடவா் 25 மீ. சென்டா் பையா் பிஸ்டல் பிரிவில் யோகேஷ் சிங், குா்ப்ரீத் சிங் தங்கம் வென்றனா். இதே பிரிவு அணிகள் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது.

    டேபிள் டென்னிஸில் தங்கம்:

    ஆடவா் டேபிள் டென்னிஸ் இறுதியில் நேபாளத்தை 3-0 என்ற கணக்கிலும், மகளிா் பிரிவு இறுதிச் சுற்றில் இலங்கையை 3-0 என்ற கேம் கணக்கிலும் வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா.

    டேக்வாண்டோவில் மகளிா் 57 கிலோ பிரிவில் காஷிஸ் மாலிக் தங்கம் வென்றாா். ராதா பாட்டி 46 கிலோ, ஆடவா் கன்ஹா 54 கிலோ, பிரித்விராஜ் 68 கிலோ வெண்கலம் வென்றனா்.

    கோகோ விளையாட்டில் இலங்கை ஆடவா், மகளிா் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.

    நேபாளம் 23 தங்கம் உள்பட 44 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இலங்கை 5 தங்கத்துடன் 46 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai