எனது பேட்டிங் முன் பூம்ரா வெறும் சிறு குழந்தை: பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

எனது காலத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டதால், பூம்ரா எனக்கு சிறு குழந்தை மாதிரி என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
எனது பேட்டிங் முன் பூம்ரா வெறும் சிறு குழந்தை: பாகிஸ்தான் முன்னாள் வீரர்!


எனது காலத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டதால், பூம்ரா எனக்கு சிறு குழந்தை மாதிரி என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக். அந்த அணியின் தலைசிறந்த ஆல்-ரௌண்டராக இருந்த அவர் 46 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ரா குறித்து பேசிய அப்துல் ரசாக்,

"கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அதனால், பூம்ரா எனக்கு வெறும் சிறு குழந்தை மாதிரி. நான் எளிதில் ஆதிக்கம் செலுத்தி, அவருடைய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்வேன். எனது காலத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டதால் பூம்ரா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் எனக்கு சிரமம் இருக்காது. அவருக்குதான் நெருக்கடி இருக்கும்" என்றார்.

மேலும் இதைத்தொடர்ந்து பூம்ராவின் பந்துவீச்சு பாணியைப் பாராட்டி பேசிய அவர்,

"பூம்ரா சிறப்பாக செயல்படுகிறார். நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவருடைய பந்துவீச்சு பாணி சற்று இயல்புக்கு மாறான முறையில் இருக்கிறது. அவர் பந்தை மிகச் சரியாக கையாளுகிறார். அதனால்தான் அவர் திறம்பட இருக்கிறார்" என்றார்.

ஜாஸ்பிரீத் பூம்ரா தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்திலும் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com