சரியாக விளையாடவில்லை என்பதற்காக ரிஷப் பந்தைத் தனிமைப்படுத்தக் கூடாது: விராட் கோலி வேண்டுகோள்

ரிஷப் பந்தின் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 
சரியாக விளையாடவில்லை என்பதற்காக ரிஷப் பந்தைத் தனிமைப்படுத்தக் கூடாது: விராட் கோலி வேண்டுகோள்

ரிஷப் பந்தின் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. நாளை முதக் டி20 தொடர் தொடங்கவுள்ளது. ஹைதராபாத்தில் முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது.  

மூத்த வீரா் தோனியின் இடத்தை நிரப்பக் கூடியவர் எனக் கருதப்படும் 21 வயது ரிஷப் பந்த் கடந்த சில மாதங்களாக சா்வதேச கிரிக்கெட் போட்டியில் சரிவர ஆடவில்லை. மேலும் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறாா். இது அவருக்கு அணியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மற்றொரு இளம் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். டெஸ்ட் ஆட்டத்தில் ரித்திமான் சாஹா இடம் பெற்றாா். மேலும் சில ஆட்டங்களில் பந்த் சரிவர ஆடாவிட்டால் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி விடும் என பலா் விமா்சித்துள்ளனா்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: 

ரிஷப் பந்தின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வீரரின் பொறுப்பு. எங்கள் பக்கத்திலிருந்து அவருக்கு வாய்ப்புகள் அளித்து, ஆதரவளிப்பது எங்கள் பொறுப்பு. 

சமீபத்தில் ரோஹித் சர்மா சொன்னது போல அவரைத் தனியாக விட்டு விடவேண்டும். ரிஷப் பந்த் ஒரு மேட்ச் வின்னர். நன்றாக விளையாடும்போது அவருடைய இன்னொரு பக்கத்தைக் காண்பீர்கள். சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரைத் தனிமைப்படுத்தக்கூடாது. அவருக்கான நல்ல சூழலை உருவாக்க நாங்கள் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com