இந்தியா - மே.இ. தீவுகள் தொடரில் மூன்றாம் நடுவர் தான் நோ பாலை கவனிப்பார்!

கள நடுவருக்குப் பதிலாக இந்தியா - மே.இ. தீவுகள் தொடரில் மூன்றாம் நடுவர் தான் நோ பாலைக் கவனிப்பார் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்தியா - மே.இ. தீவுகள் தொடரில் மூன்றாம் நடுவர் தான் நோ பாலை கவனிப்பார்!

கள நடுவருக்குப் பதிலாக இந்தியா - மே.இ. தீவுகள் தொடரில் மூன்றாம் நடுவர் தான் நோ பாலைக் கவனிப்பார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. நாளை முதல் டி20 தொடர் தொடங்கவுள்ளது. ஹைதராபாத்தில் முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இந்தத் தொடர் குறித்து ஐசிசி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா - மே.இ. தீவுகள் தொடரில், பரீட்சார்த்த முயற்சியாகக் கள நடுவருக்குப் பதிலாக மூன்றாம் நடுவர் தான் நோ பாலைக் கவனிப்பார். பந்துவீச்சாளர் நோ பாலை வீசினால் அது குறித்து கள நடுவர்களிடம் மூன்றாம் நடுவர் தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு கள நடுவர் நோ பால் என அறிவிப்பார். மூன்றாம் நடுவரின் உதவியின்றி கள நடுவர் இனி நோ பாலை அறிவிக்க மாட்டார். பரீட்சார்த்த முயற்சியின் முடிவில் இந்த நடைமுறையை எல்லா ஆட்டங்களிலும் தொடர்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. 

அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் நோ பால் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தனி நடுவர் நியமிக்கப்படவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில் ஐசிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com