சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - மே.இ. தீவுகள் ஒருநாள் ஆட்டம்: ஞாயிறு முதல் டிக்கெட் விற்பனை

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் டிசம்பர் 15 முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - மே.இ. தீவுகள் ஒருநாள் ஆட்டம்: ஞாயிறு முதல் டிக்கெட் விற்பனை

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இன்று முதல் டி20 தொடர் தொடங்கவுள்ளது. ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் டிசம்பர் 15 முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. 

அடுத்த வாரம் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சேப்பாக்கம் மைதானத்தின் சி, டி, ஈ பகுதிகளுக்கான கீழ் வரிசையில் ஒரு டிக்கெட்டின் விலை - ரூ. 1200. அதே பகுதிகளின் மேல்வரிசையில் ஒரு டிக்கெட்டுக்கான விலை - ரூ. 2400. மேலும் ரூ. 4,800, ரூ. 6,500, ரூ. 8000,  ரூ.12,000 ஆகிய விலைகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனைக்கு உள்ளன. மேலும் நீண்ட நாளாகச் சிக்கலில் உள்ள ஐ,ஜே,கே கேலரிகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஞாயிறு முதல் டிக்கெட்டுகள் சேப்பாக்கம் மைதானத்திலும் இணையத்தளங்களிலும் விற்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com