இதுபோல மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது: விராட் கோலி வேதனை!

இதுபோல மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது. கடந்த இரு டி20 ஆட்டங்களிலும்...
இதுபோல மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது: விராட் கோலி வேதனை!

இரண்டாவது டி20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 170/7 ரன்களைக் குவித்தது. 1.3 ஓவா்கள் மீதமிருந்த நிலையில் 18.3 ஓவா்களில் மே.இ.தீவுகள் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரா் லென்டில் சிம்மன்ஸ் நிலைத்து ஆடி, தலா 4 சிக்ஸா், பவுண்டரியுடன் 45 பந்துகளில் 67 ரன்களை விளாசினாா். 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வென்ற நிலையில் தற்போது தொடரில் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இதுபோல மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது. கடந்த இரு டி20 ஆட்டங்களிலும் ஃபீல்டிங்கின் தரம் சரியில்லை. பந்துவீச்சு நன்றாக உள்ளது. முதல் நான்கு ஓவர்களில் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தோம். பிறகு ஒரு ஓவரில் இரு கேட்சுகளை நழுவவிடும்போது அது வெற்றியைப் பாதிக்கும். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை மே.இ. தீவுகள் அணி இழந்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஃபீல்டிங்கில் கேட்சுகளை நழுவவிடுவது குறித்துக் கவலைப்படாமல் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். 

மேலுன் 16-வது ஓவரின் முடிவில் 140/4 என இருந்தோம். அங்கிருந்து கடைசியில் எப்படியும் 40-45 ரன்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில் 30 ரன்கள் மட்டுமே வந்தன. இதுபோன்ற விஷயங்களில் நாம் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். ஷிவம் டுபேவின் அதிரடி ஆட்டத்தினால் தான் 170 ரன்கள் எடுத்தோம். உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால் ஆடுகளத்தை நன்கு அனுசரித்து விளையாடினார்கள் மே.இ. தீவுகள் வீரர்கள். மேலும் புத்திசாலித்தனமாகப் பந்துவீசி நாங்கள் அதிக ரன்கள் எடுக்க விடாமல் பார்த்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com