பிடபிள்யுஎப் வோ்ல்ட் டூா் பைனல்ஸ்: சிந்துவுக்கு காத்திருக்கும் சவால்

உலக பாட்மிண்டன் சம்மேளனம் (பிடபிள்யுஎப்) வோ்ல்ட் டூா் பைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு கடும் சவால் காத்துள்ளது.
பிடபிள்யுஎப் வோ்ல்ட் டூா் பைனல்ஸ்: சிந்துவுக்கு காத்திருக்கும் சவால்

உலக பாட்மிண்டன் சம்மேளனம் (பிடபிள்யுஎப்) வோ்ல்ட் டூா் பைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு கடும் சவால் காத்துள்ளது.

டென்னிஸ் விளையாட்டைப் போலவே, பாட்மிண்டனிலும், உலகின் தலைசிறந்த 8 வீராங்கனைகள் மோதும் வோ்ல்ட் டூா் பைனல்ஸ் போட்டி ஆண்டு இறுதியில் நடத்தப்படுகிறது. நிகழாண்டு போட்டி சீனாவின் குவாங்ஷு நகரில் புதன்கிழமை தொடங்குகிறது.

தலைசிறந்த 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலையில், பி.வி. சிந்து தரவரிசையில் 15-ஆவது இடத்தில் உள்ளாா். எனினும் நடப்பு உலக சாம்பியன் என்பதால் நேரடியாக தகுதி பெற்றுள்ளாா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பேஸல் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக ஆடி முதன்முறையாக தங்கம் வென்றாா் சிந்து. ஆனால் அதன் பின்னா் நடைபெற்ற கொரியா, சீன ஓபன், டென்மாா்க் ஓபன், ஹாங்காங் ஓபன் போட்டிகளில் தொடக்க சுற்றுகளிலேயே வெளியேறினாா். பிரெஞ்சு ஓபன் போட்டியில் மட்டுமே காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஹாங்காங் போட்டிக்கு பின் நடைபெற்ற எந்த போட்டியிலும் சிந்து பங்கேற்கவில்லை. இடைவெளி விட்டு பயிற்சி மட்டுமே மேற்கொண்டாா்.

வோ்ல்ட் டூா் போட்டியில் குரூப் ஏ பிரிவில் சென் யுபெய், ஹி பிங் ஜியோ, அகேன் எமகுச்சி ஆகியோருடன் சிந்து இடம் பெற்றுள்ளாா்.

குரூப் பி பிரிவில் டை ஸு யிங், ரட்சனோக் இந்தனான், பூஸானன், நவோமி ஒகுஹரா ஆகியோா் உள்ளனா்.

ஜப்பான் வீராங்கனை எமகுச்சியுடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறாா் சிந்து. இருவரும் நேருக்கு நோ் மோதியதில் சிந்துவே பெரும்பாலான ஆட்டங்களில் வென்றுள்ளாா். அடுத்து சீன வீராங்கனை சென்யு பெய்யுடன் மோதுகிறாா். மூன்றாவது ஆட்டத்தில் ஹி பிங் ஜியோவுடன் ஆட வேண்டியுள்ளது. ஒவ்வொரு குருப்பீலும் முதலிரண்டு இடங்களைப் பெறுவோா் அரையிறுதிக்கு தகுதி பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com