10 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் மீண்டும் நடைபெறும் டெஸ்ட் ஆட்டம்!

பாகிஸ்தான் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம், ராவல்பிண்டியில் இன்று தொடங்கியுள்ளது.
10 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் மீண்டும் நடைபெறும் டெஸ்ட் ஆட்டம்!

பாகிஸ்தான் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம், ராவல்பிண்டியில் இன்று தொடங்கியுள்ளது. இதன்மூலம் 10 வருடங்கள் 9 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் ஆட்டம் பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பியுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்த டெஸ்டில் இடம்பெற்றுள்ள அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் முதல்முறையாகத் தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் ஆட்டத்தை விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் கேப்டன் அஸார் அலி, 75 டெஸ்டுகளில் விளையாடிய போது இதுவரை பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடியதில்லை. 

2009-ல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான லாகூர் டெஸ்ட், தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. மைதானத்துக்கு இலங்கை அணி வீரர்களை அழைத்து வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். சில வீரர்களும் நிர்வாகிகளும் காயமடைந்தார்கள். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறுவது தடைபட்டது. சமீபகாலமாகத்தான் டி20, ஒருநாள் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அங்கு டெஸ்ட்  ஆட்டம் நடைபெறுகிறது. இலங்கை அணி ராவல்பிண்டியிலும் கராச்சியிலும் டெஸ்ட் ஆட்டங்களை விளையாடுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com