மே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா ஐபிஎல் ஏலம்?: பொலார்ட் பதில்

மே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா ஐபிஎல் ஏலம்?: பொலார்ட் பதில்

மே.இ.தீவுகள் அணிக்கு  எதிரான டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்திய அணி. 

மே.இ.தீவுகள் அணிக்கு  எதிரான டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்திய அணி. 

மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 ஆட்டத்தில் ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி 240/3 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 173/8 ரன்களை எடுத்துத் தோல்வியுற்றது. கேப்டன் விராட் கோலி 7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 70 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் நின்றார். தொடர் நாயகன் விருது கோலிக்கே கிடைத்தது.

இந்நிலையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக மே.இ. தீவுகள் அணி வீரர்கள் அதிகம் மெனக்கெடுகிறார்கள் என்றொரு விமரிசனம் வீரர்கள் மீது விழுந்தது. இதற்கு மே.இ. தீவுகள் அணி கேப்டன் பொலார்ட் பதில் அளித்ததாவது:

எங்கள் அணி வீரர்கள் ஓய்வறையில் ஐபிஎல் பற்றி நினைப்பதை விடவும் நீங்கள் அதிகமாக நினைக்கிறீர்கள். ஐபிஎல் ஏலத்தில் நீங்கள் தேர்வு செய்யப்படுகிறீர்களா இல்லையா என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவுக்கு எதிராக சதமடித்த வீரர் ஒருவர், ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாததை நான் பார்த்துள்ளேன். 

இந்தத் தொடரில் நன்றாக விளையாடுங்கள். மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்றுதான் பேசிக்கொண்டோம். 8 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் என்ன தேவை என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com