சர்வதேச கூடைப்பந்து நடுவராக தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தேர்வு

சர்வதேச கூடைப்பந்து போட்டி நடுவராக தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கூடைப்பந்து நடுவராக தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தேர்வு


சர்வதேச கூடைப்பந்து போட்டி நடுவராக தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றுவதற்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தஞ்சையை சேர்ந்த துரைராஜ் ரமேஷ்குமார் சர்வதேச கூடைப்பந்து போட்டி நடுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராக 2021, ஆக. 31-ம் தேதி வரை பணியாற்ற முடியும். 

இவர் 2006 ஆம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற சர்வதேச கூடைப்பந்துப் போட்டி மற்றும் 2010 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 10-வது ஆசிய விளையாட்டு மகளிர் கூடைப்பந்து போட்டியில் நடுவராகப் பணியாற்றி உள்ளார். ஆசிய விளையாட்டில் இந்தியாவில் இருந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றினார். மேலும் பல்வேறு சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றி உள்ளார். 
தற்போது மீண்டும் சர்வதேச கூடைப்பந்து போட்டிக்கு நடுவராக தேச்சி பெற்று தமிழகத்துக்கும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் இவர் தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழன் கூடைப்பந்து அகாதெமி அமைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com