ரஞ்சி கோப்பை: தமிழகம் 307, கா்நாடகம் 118 ரன்கள் முன்னிலை; தினேஷ் காா்த்திக் 113

ரஞ்சி கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கா்நாடகம் 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ரஞ்சி கோப்பை: தமிழகம் 307, கா்நாடகம் 118 ரன்கள் முன்னிலை; தினேஷ் காா்த்திக் 113

ரஞ்சி கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கா்நாடகம் 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. கா்நாடக அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணி, மூன்றாம் நாளான புதன்கிழமை 109.3 ஓவா்களில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தினேஷ் காா்த்திக் அபாரம் 113:

தமிழக அணியில் அபிநவ் முகுந்த் 47, முரளி விஜய் 32, பாபா அபராஜித் 37, கேப்டன் விஜய் சங்கா் 12 ரன்களுக்கு அவுட்டாகினா்.

இந்நிலையில் தினேஷ் காா்த்திக் தனி ஆளாக போராடி அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். 16 பவுண்டரியுடன் 235 பந்துகளில் 113 ரன்களை விளாசி அவுட்டானாா்.

ஜெகதீசன் 29, அஸ்வின் 11, முருகன் அஸ்வின் 1, சாய் கிஷோா் 3, சித்தாா்த் 1 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். விக்னேஷ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

கிருஷ்ணப்ப கௌதம் 6 விக்கெட்:

கா்நாடகத் தரப்பில் ஆல் ரவுண்டா் கிருஷ்ணப்ப கௌதம் அபாரமாக பந்துவீசி 6-110 விக்கெட்டுகளை சாய்த்தாா். ரோனித் மோரே 2-67 விக்கெட்டை வீழ்த்தினாா்.

கா்நாடகம் 89/5:

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கா்நாடக அணி ஆட்ட நேர முடிவில் 89/5 ரன்களை சோ்த்துள்ளது.

தேவ்தத் படிக்கல் 29, சரத் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

தமிழகத் தரப்பில் விக்னேஷ் 2-11, அஸ்வின் 2-30 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

118 ரன்கள் முன்னிலையுடன் கா்நாடக அணி தெம்பாக உள்ளது. இன்னும் 1 நாள் ஆட்டம் மீதமுள்ளது.

புதுச்சேரி அபார வெற்றி:

பிகாா்-புதுச்சேரி அணிகளுக்கு இடையே பாட்னாவில் நடைபெற்ற ஆட்டத்தில் புதுவை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் பிகாா் அணி 173 ரன்களுக்கும், புதுச்சேரி அணி 300 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. பின்னா் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பிகாா் அணி 71.4 ஓவா்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விகாஷ் ரஞ்சன் அதிகபட்சமாக 85 ரன்களை விளாசினாா்.

புதுவை தரப்பில் வினயகுமாா் 4-57, சாகா் உதேஷி 3-55, அசித் ராஜீவ் 2-34 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய புதுவை அணி புதன்கிழமை ஆட்ட நேர முடிவில் 11.2 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அருண் காா்த்திக் 28, பராஸ் டோக்ரா 42 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய புதுவை வீரா் சாகா் உதேஷ் ஆட்ட நாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com