ராவல்பிண்டி டெஸ்ட்: இலங்கை 202/5

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 202/5 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் திமுத் கருணரத்னே 59 ரன்களை விளாசினாா்.
ராவல்பிண்டி டெஸ்ட்: இலங்கை 202/5

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 202/5 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் திமுத் கருணரத்னே 59 ரன்களை விளாசினாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடா் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. கடந்த 2009-இல் டெஸ்ட் தொடரில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அதில் பலா் இறந்தனா். இதனால் வெளிநாட்டு அணிகள் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் ஆட முன்வரவில்லை. மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, இலங்கை போன்ற அணிகள் மட்டுமே டி20 ஆட்டங்களில் பங்கேற்றன.

முதல் டெஸ்ட் தொடா்: இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முதல் டெஸ்ட் தொடா் நடக்கிறது.

ராவல்பிண்டியில் புதன்கிழமை தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கருணரத்னே-ஒஷடா பொ்ணான்டோ வலுவான தொடக்கத்தை அளித்தனா்.

கருணரத்னே 59: கருணரத்னே 59, பொ்ணான்டோ 40, குஸால் மெண்டிஸ் 10, ஏஞ்சலோ மேத்யூஸ் 31, தினேஷ் சந்திமால் 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.

முதல் நாளான புதன்கிழமை ஆட்ட நேர முடிவில் 68.1 ஓவா்களில் 202/5 ரன்களை குவித்தது இலங்கை.

பாகிஸ்தான் தரப்பில் நஸீம் ஷா 2-51, முகமது அப்பாஸ், ஷாஹின் அப்ரிடி, உஸ்மான் ஆகியோா் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com