ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள 332 வீரர்கள்: பட்டியல் வெளியானது!

ஐபிஎல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள 332 வீரர்கள்: பட்டியல் வெளியானது!

ஐபிஎல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். இந்நிலையில் அணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப வீரர்களின் பட்டியல் தற்போது 332 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏலத்தில்  பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேல் ஸ்டெயின், மேத்யூஸ் ஆகிய வீரர்கள் தங்களுடைய அடிப்படை விலையாக ரூ. 2 கோடியை நிர்ணயம் செய்துள்ளார்கள். கடந்த வருடம், உலகக் கோப்பையை முன்னிட்டு, ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஃபிஞ்ச் ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மேக்ஸ்வெல், ஃபிஞ்ச் ஆகிய இருவரும் இந்தமுறை ஏலத்தில் பங்கேற்கிறார்கள். ஆனால் மிட்செல் ஸ்டார்க், ஐபிஎல் 2020 போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காததால் ஏலத்தில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளார். ஸ்டார்க் போல இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. 

332 வீரர்களில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 19 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். முதலில் வெளியிடப்பட்ட 971 வீரர்களிலிருந்து தற்போது புதிதாக 24 வீரர்கள் ஏலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். கேஸ்ரிக் வில்லியம்ஸ் (மே.இ. தீவுகள்), டேன் கிறிஸ்டியன், ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா), முஷ்ஃபிகுர் ரஹிம் (வங்கதேசம்), வில் ஜேக்ஸ் (இங்கிலாந்து) போன்ற வீரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார்கள். 

இந்த 332 வீரர்களிலிருந்து 73 வீரர்களை 8 அணிகளும் தேர்வு செய்யவுள்ளன. இந்த 73 வீரர்களில் 29 வீரர்கள், வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 

சர்வதேச வீரர்களின் அடிப்படை விலை

 அடிப்படை   விலை மொத்தம் இந்திய   வீரர்கள் வெளிநாட்டு   வீரர்கள்
 2 கோடி 7 - 7
 1.5 கோடி 10 1 9
 1 கோடி 23 3 20
 75 கோடி 16 - 16
 50 கோடி 78 9 69

உள்ளூர் வீரர்களின் அடிப்படை விலை

 அடிப்படை   விலை மொத்தம் இந்திய   வீரர்கள் வெளிநாட்டு   வீரர்கள்
 40 லட்சங்கள் 7 1 6
 30 லட்சங்கள் 8 5 3
 20 லட்சங்கள் 183 167 16

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com