ரிஷப் பந்த் குறித்து நாம் தொடர்ந்து விவாதிப்பது இதனால் தான்: பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

அவர் எந்த அணிக்கும் விசேஷ திறமை கொண்ட வீரராக இருப்பார் என அனைவரும் நம்புகிறோம்...
ரிஷப் பந்த் குறித்து நாம் தொடர்ந்து விவாதிப்பது இதனால் தான்: பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்கிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர், விக்ரம் ராத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரிஷப் பந்த் குறித்து தொடர்ந்து நாம் விவாதிப்பதற்குக் காரணம், அவரிடம் அபார திறமை உள்ளதால் தான். அவர் எந்த அணிக்கும் விசேஷ திறமை கொண்ட வீரராக இருப்பார் என அனைவரும் நம்புகிறோம். அவர் நல்ல வீரர் என்பதால் தான் தேர்வுக்குழுவினரும் அணி நிர்வாகமும் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறோம். ரன்கள் எடுக்க ஆரம்பித்தவுடன் அவர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியுள்ளார். 

சமீபத்தில் ரிஷப் பந்த் பற்றி இந்திய கேப்டன் கோலி கூறியதாவது:

ரிஷப் பந்தின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வீரரின் பொறுப்பு. எங்கள் பக்கத்திலிருந்து அவருக்கு வாய்ப்புகள் அளித்து, ஆதரவளிப்பது எங்கள் பொறுப்பு. சமீபத்தில் ரோஹித் சர்மா சொன்னது போல அவரைத் தனியாக விட்டு விடவேண்டும். ரிஷப் பந்த் ஒரு மேட்ச் வின்னர். நன்றாக விளையாடும்போது அவருடைய இன்னொரு பக்கத்தைக் காண்பீர்கள். சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரைத் தனிமைப்படுத்தக்கூடாது. அவருக்கான நல்ல சூழலை உருவாக்க நாங்கள் உள்ளோம் என்று கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com