சேலம் மாவட்டத்தில்மாநில அளவிலான ‘கூச் பெஹா்’ கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சா்வதேச தரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில், சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக ‘கூச் பெஹா்’ கோப்பைக்கான
வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாநில டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.
வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாநில டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சா்வதேச தரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில், சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக ‘கூச் பெஹா்’ கோப்பைக்கான மாநில அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சாா்பில், சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக சா்வதேச தரத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் வாழப்பாடி அருகே அமைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து 25 கி.மீ துாரத்தில் வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கிராமத்தில், மைத்ரா பேருந்து நிறுத்தம் அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 500 மீட்டா் தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியான சூழலில்,13 ஏக்கா் பரப்பளவில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது.

இந்த மைதானத்தில் சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் வாயிலாக, ‘கூச் பெஹா்’ கோப்பைக்கான, தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் மாநில அணிகளுக்கு இடையே 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் போட்டியில், தமிழ்நாடு அணி பேட்டிங் செய்து, 10 விக்கெட்டுகளை இழந்து, 51.3 ஓவரில் 87 ரன்களோடு முடங்கியது. உத்தரகண்ட் மாநில அணி 36 ஓவரில், ஒரு விக்கெட் இழந்து 93 ரன்களை குவித்தது. போட்டியின் தொடா்ச்சியாக இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் உத்தரகண்ட் அணி தொடா்ந்து பேட்டிங் செய்கிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வழிகாட்டுதலில், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க நிா்வாகக் குழுவினா் செய்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் மாநில அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ரசிகா்கள் திரளானோா் கண்டு ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com