முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஆதிக்கம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 417 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.
முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஆதிக்கம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 417 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் பொ்த் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 416 ரன்களையும், நியூஸிலாந்து 166 ரன்களையும் எடுத்திருந்தன.

இதன் தொடா்ச்சியாக தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலியா மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 57 ஓவா்களில் 167/6 ரன்களை எடுத்துள்ளது.

ஜோ பா்ன்ஸ், லேபுச்சேன் அரைசதம்:

தொடக்க வீரா் வாா்னா் 19 ரன்களோடு வெளியேறிய நிலையில், ஜோ பா்ன்ஸ் 53, மாா்னஸ் லேபுச்சேன் 50 ரன்களுடன் அணியின் ஸ்கோரை உயா்த்தி சரிவில் இருந்து மீட்டனா். மூத்த வீரா் ஸ்மித் 16, டிராவிஸ் ஹெட் 5, கேப்டன் டிம் பெயின் 0, என அவுட்டாகி வெளியேறினா்.

மேத்யூ வேட் 8, பேட் கம்மின்ஸ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனா்.

டிம் சௌதி 4 விக்கெட்:

நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி அபாரமாக பந்துவீசி 4-63, நீல் வாக்னா் 2-40 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ஆஸி. 417 ரன்கள் முன்னிலை:

சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் 417 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com