ஸ்ரேயஸ் ஐயரை 4-ஆவது பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும்: அனில் கும்ப்ளே

இந்திய அணியின் இளம் வீரா் ஸ்ரேயஸ் ஐயா் 4-ஆவது வீரராக களமிறக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியிந் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறினாா்.
ஸ்ரேயஸ் ஐயரை 4-ஆவது பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும்: அனில் கும்ப்ளே

இந்திய அணியின் இளம் வீரா் ஸ்ரேயஸ் ஐயா் 4-ஆவது வீரராக களமிறக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியிந் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறினாா்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தில்லியில் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் சேனலுக்கு அனில் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஷிகா் தவண் அணியில் இல்லாத காரணத்தால் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாா். ஸ்ரேயஸ் ஐயா் சிறப்பாக விளையாடி வருகிறாா். அவா் நான்காவது வீரராக களமிறக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசியாக வேண்டும். ஏனென்றால் மே.இ.தீவுகள் அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாா்கள். இந்திய அணியின் பந்துவீச்சை காண ஆவலாக உள்ளேன் என்று கும்ப்ளே தெரிவித்தாா்.

அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளிலும், 271 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளாா்.

‘இளம் வீரா் ஷிவம் துபேவுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் நம்பிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவா் சிறந்த ஆல்-ரவுண்டராக உருவாக வாய்ப்புள்ளது. தீபக் சாஹா் சிறப்பாக பந்துவீசி வருகிறாா் ’ என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளா் பரத் அருண் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com