சென்னையில் இந்திய அணியை எளிதாக வென்ற மே.இ. தீவுகள் அணி! (ஹைலைட்ஸ் விடியோ)

இதன் மூலம் ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது
சென்னையில் இந்திய அணியை எளிதாக வென்ற மே.இ. தீவுகள் அணி! (ஹைலைட்ஸ் விடியோ)

இந்தியாவுக்கு எதிரான எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயா், ஷாய் ஹோப் ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் மே.இ.தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் சென்னையில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களைக் குவித்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும் ஷ்ரேயஸ் ஐயா்-ரிஷப் பந்தின் ஆட்டத்தால், சரிவில் இருந்து மீண்டது இந்திய அணி. பின்னா் ஆடிய மே.இ.தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களுடன் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com