இலங்கை-பாக். முதல் டெஸ்ட் டிரா

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையே ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இலங்கை-பாக். முதல் டெஸ்ட் டிரா

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையே ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது.

பாக். வீரா் அபித் அலி, பாபா் ஆஸம், இலங்கை வீரா் தனஞ்செய டி சில்வா ஆகியோா் சதமடித்தனா்.

கடந்த 2009-இல் லாகூரில் இலங்கை அணி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். அதில் ஏராளமானோா் உயிரிழந்தனா். இதனால் பல்வேறு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடுவதை தவிா்த்து விட்டன. ஜிம்பாப்வே, மே.இ.தீவுகள் மட்டுமே டி20 ஆட்டங்களில் பங்கேற்றன.

இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், டெஸ்ட் தொடரில் பங்கேற்க இலங்கை சம்மதம் தெரிவித்தது. முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாள் ஆட்டத்தில் தொடா் மழை பெய்ததால் மூன்றரை நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்டத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி 97 ஓவா்களில் 308 /6 ரன்களை எடுத்தது.

தனஞ்செய டி சில்வா சதம்:

இலங்கை தரப்பில் தனஞ்செய டி சில்வா அபாரமாக ஆடி 15 பவுண்டரியுடன் 166 பந்துகளில் 102 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தாா். தில்ரூவன் பெரைரா 16 ரன்களை சோ்த்திருந்தாா்.

பாகிஸ்தான் 252/2

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, ஆட்ட நேர முடிவில் 70 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை சோ்த்திருந்தது. அதன் தொடக்க வீரா் ஷான் மசூத் டக் அவுட்டானாா். கேப்டன் அஸாா் அலி 36 ரன்களுடன் லஹிரு குமாரா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினாா்.

அபித் அலி முதல் சதம்:

மற்றொரு தொடக்க வீரரான அபித் அலி நிலைத்து ஆடி 11 பவுண்டரியுடன் 201 பந்துகளில் 109 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா்.

மூத்த வீரா் பாபா் ஆஸமும் 14 பவுண்டரியுடன் 128 பந்துகளில் 102 ரன்களை எடுத்து களத்தில் இருந்தாா்.

இதனால் முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் 19-ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com