இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! பிரபல வீரர் நீக்கம்!

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! பிரபல வீரர் நீக்கம்!

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், மும்பையில் ஜனவரி 14 அன்று தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். மேக்ஸ்வெல்லின் நீக்கம் ஆச்சர்யப்படுத்தினாலும் அவர், பிபிஎல் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றபிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்டில் கலக்கி வரும் மார்னஸ் லபுசானே ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். ஜோஷ் ஹேஸில்வுட், சீன் அபாட், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), சீன் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்காம்ப், ஜோஷ் ஹேஸில்வுட், மார்னஸ் லபுசானே, கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com