ரூ. 6.75 கோடிக்கு பியூஷ் சாவ்லாவை ஏன் தேர்வு செய்தோம் தெரியுமா?: சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்

தரமான லெக் ஸ்பின்னராக சாவ்லா தன்னை நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார்... 
ரூ. 6.75 கோடிக்கு பியூஷ் சாவ்லாவை ஏன் தேர்வு செய்தோம் தெரியுமா?: சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். 73 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்கிற நிலைமையில் 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளன. எனினும் அனைத்து அணிகளும் தங்களுக்கான 8 வெளிநாட்டு வீரர்களை ஏலம் வழியாகத் தேர்வு செய்து கொண்டன. யூசுப் பதான், விஹாரி போன்ற இந்திய அணிக்காக விளையாடிய, விளையாடும் வீரர்கள் சிலர் எந்த அணிக்கும் தேர்வாகாமல் ஏமாற்றம் அடைந்தார்கள். 

நேற்றைய ஏலத்தில் பியூஷ் சாவ்லாவை ரூ. 6.75 கோடிக்குத் தேர்வு செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த முடிவு குறித்து சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும். மேலும் அணிக்குக் கூடுதலாக ஒரு லெக் ஸ்பின்னர் வேண்டும் என தோனி விரும்பினார். அதனால் தான் அணியில் ஏற்கெனவே நிறைய சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் பியூஷ் சாவ்லாவை ஏலத்தில் தேர்வு செய்தோம் எனக் கூறியுள்ளார்.

ஏலத்தில் சிஎஸ்கே சார்பாகப் பங்கேற்ற முன்னாள் வீரர் எல். பாலாஜி கூறியதாவது: சென்னை ஆடுகளத்துக்கு எத்தனை சுழற்பந்துவீச்சாளர்களைக் கூட வைத்துக்கொள்ளலாம். தோனியின் விருப்பம் இது. சாவ்லா, சிஎஸ்கே அணிக்குப் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியதாவது: சாவ்லாவின் திறமை மீது எங்களுக்கு அதிக மதிப்பு உண்டு. அவருக்கு தோனியுடன் நல்ல நட்பும் புரிதலும் உள்ளன. தரமான லெக் ஸ்பின்னராக சாவ்லா தன்னை நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com