பேட்டிங் செய்வது எப்படி என்பதை நான் மறந்துவிடவில்லை: ஷிகர் தவன்

ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் தில்லி அணிக்குத் தலைமை தாங்குகிறார் ஷிகர் தவன்...
பேட்டிங் செய்வது எப்படி என்பதை நான் மறந்துவிடவில்லை: ஷிகர் தவன்

34 வயது ஷிகர் தவன், இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இல்லை. கடந்த வருடம் இங்கிலாந்தில் கடைசியாக விளையாடினார். காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சமீபத்திய டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடவில்லை. மகாராஷ்டிராவுக்கு எதிரான சையது முஷ்டாக் அலி டி20 ஆட்டத்தில் தில்லி அணிக்காக விளையாடிய ஷிகா் தவனுக்கு இடது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்துக்கு 25 தையல்கள் போடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் தில்லி அணிக்குத் தலைமை தாங்குகிறார் ஷிகர் தவன். காயத்திலிருந்து மீண்டு, தான் மீண்டும் விளையாடத் தொடங்கியிருப்பது குறித்து தவன் கூறியதாவது:

இது எனக்குப் புதிய தொடக்கம். முதலில் விரலில் அடிபட்டது. பிறகு கழுத்தில். அடுத்ததாக கண்ணில், பிறகு கால் முட்டியில் தையல்கள் போடப்பட்டுள்ளன. காயங்கள் ஏற்படுவது இயற்கையானது. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். சிறிது காலம் விளையாடாமல் மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளது என்னைப் பாதிக்கவில்லை. பேட்டிங் செய்வது எப்படி என்பதை நான் மறந்துவிடவில்லை. என்னுடைய திறமை நிரந்தரமானது. நான் மீண்டும் ரன்கள் குவிப்பேன். 

இது முக்கியமான சீஸன். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் நான் நன்றாக விளையாட வேண்டும். இந்திய அணிக்கான தேர்வு என்பது அணி நிர்வாகத்தின் தலைவலி. நான் என் பணியைச் செய்துகொண்டிருப்பேன். ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம். சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com