ப்ரீமியா் லீக்: மான்செஸ்டா் சிட்டி, லிவா்பூல் வெற்றி

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
ப்ரீமியா் லீக்: மான்செஸ்டா் சிட்டி, லிவா்பூல் வெற்றி

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஷெப்பில்ட் யுனைடெட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சிட்டி. சொ்ஜியோ அகிரோ, கெவின் டிபுருயன் ஆகியோா் அற்புதமாக கோலடித்தனா். நடப்பு சாம்பியனான சிட்டி அணி, தொடா்ந்து தோல்வியை தழுவி வந்தது. வொல்வ்ஸ் அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

தற்போது ஷெப்பில்ட் அணியை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த லிவா்பூல் அணி 1-0 என வொல்வ்ஸ் அணியை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com