டேவிஸ் கோப்பை: ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி!

முதல் நாளன்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இத்தாலி அணி...
டேவிஸ் கோப்பை: ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி!

இந்தியா-இத்தாலி அணிகளுக்கு இடையிலான  டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. வரும் நவம்பர் மாதம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் டேவிஸ் கோப்பை முதல் உலக குழு பைனல்ஸ் போட்டிகள் நடக்கின்றன. இதற்கு தேர்வு பெறுவதற்கான தகுதி ஆட்டங்கள் ஓரே நேரத்தில் உலகம் முழுவதும் பிப். 1, 2 தேதிகளில் 12 நகரங்களில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக வலுவான இத்தாலியும்-இந்திய அணியும் மோதும் ஆட்டம் கொல்கத்தா செளத் கிளப்பில் இன்று நடைபெறுகிறது. 

இன்று நடைபெற்ற முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், உலகின் 37-ஆவது நிலை வீரர் ஆன்டிரியஸ் செப்பியுடன் மோதினார். இதில், 4-6, 2-6 என்கிற நேர் செட்களில் ராம்குமாரை வீழ்த்தினார் இத்தாலியின் செப்பி. இதனால் இத்தாலி அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து, அடுத்த ஆட்டத்தில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், இத்தாலியின் மேட்டியோ பெர்ரட்டனியுடன் மோதினார். இதிலும், 4-6, 3-6 என்கிற நேர் செட்களில் இந்திய வீரருக்குத் தோல்வி கிடைத்தது.

இதையடுத்து முதல் நாளன்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இத்தாலி அணி.

கடந்த 2015-இல் ஆஸி. ஓபனில் இரட்டையர் பட்டம் வென்ற சைமோன் பொலேலியுடன் இணைந்து மார்கோ சனிக்கிழமை இந்திய இணையான ரோஹன் போபண்ணா-திவிஜ் சரணுடன் மோதுகின்றனர். மேலும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்-ஆன்ட்ரியஸ் சிப்பியுடனும், ராம்குமார் ராமநாதன்-மேட்டியோவுடனும் மோதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com