இலங்கை கிரிக்கெட் அணிக்குப் புதிய கேப்டன் நியமனம்! தினேஷ் சண்டிமல் நீக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக செயல்பட்ட தினேஷ் சண்டிமலை அணியிலிருந்து நீக்கம்...
இலங்கை கிரிக்கெட் அணிக்குப் புதிய கேப்டன் நியமனம்! தினேஷ் சண்டிமல் நீக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக செயல்பட்ட தினேஷ் சண்டிமலை அணியிலிருந்து நீக்கம் செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். 

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 13 அன்று தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் கேப்டனாகச் செயல்பட்ட தினேஷ் சண்டிமல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திமுத் கருணாரத்னே இலங்கை டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் 4 இன்னிங்ஸில் மொத்தமாக 24 ரன்கள் மட்டுமே எடுத்தார் சண்டிமல். இதையடுத்து அவர் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை அணி: திமுத் கருணாரத்னே (கேப்டன்), நிரோஷன் டிக்வெல்லா, லஹிரு திரிமானே, கெளஷல் சில்வா, குஷால் மெண்டிஸ், குஷால் பெரேரா, மிலிண்டா சிரிவர்தனா, தனஞ்ஜெய டி சில்வா, ஒஷாடா ஃபெர்னாண்டோ, ஏஞ்சலோ பெரேரா, சுரங்கா லக்மல், கசுன் ரஞ்சிதா, விஸ்வா ஃபெர்னாண்டோ, சமிகா கருணாரத்னே, முகமது ஷிராஸ், லக்‌ஷன் சண்டகன், லசித் எம்புல்டெனியா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com