ஐசிசி ஒரு நாள் தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி. அதே நேரத்தில் விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தங்கள் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளனர்.
ஐசிசி ஒரு நாள் தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி. அதே நேரத்தில் விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தங்கள் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது, டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே இந்திய அணி அண்மையில் ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரை 2-1 எனவும், நியூஸிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை 4-1 எனவும் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதனால் அணிகள் பட்டியலில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 
நியூஸிலாந்து மூன்றாவது இடத்தில் இருந்து 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும், பெளலர்கள் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளனர்.
தோனி முன்னேற்றம்
ஆஸி.யுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அற்புதமாக ஆடி 3 அரைசதங்களை விளாசிய தோனி, தொடர் நாயகன் விருதையும் பெற்றார். தற்போது 21-ஆவது இடத்தில் இருந்து 17-ஆவது இடத்துக்கு தோனி முன்னேறியுள்ளார்.  கேதார் ஜாதவ் 8 இடங்கள் முன்னேறி 35-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
3-ஆவது இடத்தில் பெளல்ட்
இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரில் அபாரமாக பந்துவீசி 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பெளல்ட் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சஹல், புவனேஸ்வர் குமார்:
அதே நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சஹல் 6-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கும், புவனேஸ்வர் குமார் 23-ஆம் இடத்தில் இருந்து 17-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். 
தென்னாப்பிரிக்க வீரர்கள் குயின்ட் டி காக் (8), ஹாஷிம் ஆம்லா (13), ரீஸா ஹென்ட்ரிக்ஸ் (94) இடத்தையும், பந்துவீச்சாளர்கள் ஆன்டைல் பெலுக்வயோ (19), பிரிட்டோரியஸ் (44) இடத்திலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com