டி20 தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என நியூஸிலாந்து கைப்பற்றியது.
டி20 தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என நியூஸிலாந்து கைப்பற்றியது.

இந்திய அணி ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றிய நிலையில், அதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் ஆட்டத்தில் நியூஸி. 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 

இந்நிலையில், 3-ஆவது டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக காலின் முன்ரோ 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசினார். க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

213 என்ற கடின வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. விஜய் ஷங்கர் 43, ரோஹித் ஷர்மா 38, தினேஷ் கார்த்திக் 33* ரன்கள் சேர்த்தனர். டேல் மிட்செல், மிட்செல் சான்டனர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என நியூஸிலாந்து கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com