சுடச்சுட

  
  HOCKEY_NATIONAL_R

  தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி (ஏ டிவிசன்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ரயில்வே பட்டம் வென்றது.
   இரு அணிகளும் பலமானவை என்பதால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக இருந்தது. 23-ஆவது நிமிடத்தில் பஞ்சாப் வீரர் ரூபிந்தர் பால் சிங் முதல் கோலை அடித்தார். இதன் பின் ரயில்வேயின் ஹர்ஸாகிப் சிங் 35-ஆவது நிமிடத்தில் பதில் கோலடித்தார். தொடர்ந்து அவரே 45 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 57-ஆவது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் 3-ஆவது கோலையும் அடித்தனர்.
   பஞ்சாப் வீரர் ராமதீப் சிங் 60-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.
   இறுதியில் ரயில்வே பட்டம் வென்றது.
   முன்னதாக மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரோலிய அணி 4-1 என பஞ்சாப் சிந்து வங்கியை வென்று வெண்கலம் வென்றது.
   தேசிய மகளிர் ஹாக்கி:
   ஹிஸாரில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் கர்நாடக அணி 3-0 என கூர்க்கையும், ம.பி. ஹாக்கி அகாதெமி 3-1 என போபாலையும், மகாராஷ்டிரா 6-0 என சிஆர்பிஎஃப்பையும், பஞ்சாப் 3-0 என கேரளத்தையும் வீழ்த்தின.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai