சுடச்சுட

  

  உலகக் கோப்பைக்கான திட்டங்களில் இந்த மூன்று வீரர்கள் உள்ளார்கள்: தேர்வுக்குழுத் தலைவர் தகவல்!

  By எழில்  |   Published on : 11th February 2019 02:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  indian_team_t20

   

  உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரஹானே ஆகிய மூவரும் இடம்பெற வாய்ப்புண்டு என தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

  க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:

  ஒரே ஒரு இடத்தைத் தவிர உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியைக் கிட்டத்தட்ட தேர்வு செய்துவிட்டோம். சந்தேகமில்லாமல் அணித் திட்டத்தில் ரிஷப் பந்தும் உள்ளார். கடந்த ஒருவருடமாக அவர் அதிகமாகப் பங்காற்றியுள்ளார். 15 பேருக்கான அணிக்காக நாங்கள் தேர்வு செய்துள்ள வைத்துள்ள 20 வீரர்களில் நான்காவது ஆல்ரவுண்டராக உள்ளார் விஜய் சங்கர். சர்வதேசப் போட்டிக்கான திறமைகளைக் கொண்டுள்ளார். கிடைத்த வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரஹானே மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அவரும் எங்களுடைய திட்டங்களில் உள்ளார் என்று கூறியுள்ளார்.

  இந்திய அணியில் 2 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகிற பட்சத்தில் ரோஹித், தவான், கோலி, ராயுடு, தோனி, ஜாதவ், பாண்டியா, புவனேஸ்வர், பூம்ரா, சாஹல், குல்தீப் என்கிற 11 பேர் கொண்ட அணியே பிரதானமாக இருக்கும்.

  இந்நிலையில் மீதமுள்ள 4 நான்கு இடங்களுக்கு ஷமி, ரஹானே, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஜடேஜா, கேஎல் ராகுல், கலீல் அஹமது, உமேஷ் யாதவ் ஆகிய 9 வீரர்கள் போட்டியில் உள்ளார்கள். இதைத்தான் 20 பேர் கொண்ட பட்டியல் என்று பிரசாத் கூறிருக்க வாய்ப்புண்டு.

  இந்த 9 பேரில் ஷமி, ரஹானே (அதாவது ராகுல் தேவையில்லை என்று எண்ணினால்), தினேஷ் கார்த்திக் ஆகியோரின் தேர்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறலாம். மீதமுள்ள ஒரு இடத்துக்கு விஜய் சங்கரும் ரிஷப் பந்தும் ஜடேஜாவும் கலீல் அஹமதுவும் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருக்கும். இவர்களையும் தாண்டி உலகக் கோப்பை அணியில் மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், அக்‌ஷர் படேல் ஆகியோர் தேர்வானால் அதிர்ஷ்டம் என்றுதான் கூறமுடியும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai